சரியானதுதானே
எப்படியோ வந்தது
இந்த நம்பிக்கை...
கற்பனைகள் மாறி நிஜமாக நேருமென்று, எப்படியோ வந்தது
இந்த நம்பிக்கை!
இன்னுமா என்னை நான் சந்தேகிக்கிறேன்? என்னையும் என்னையும் நானே இருக்கிறேன்!
பிழைகளின் அடுத்த நிலை சரியாவதுதானே?
மீண்டும் ஒரு முறை முயற்சிக்கும் என் எண்ணமும் சரியானதுதானே?
இந்த வெற்றி எல்லாம் எனக்கொன்றும் தேவையே இல்லை!
இந்த வரலாற்றில் நானும் இருந்தேன் என்கின்ற ஒற்றை வரி போதும்.
ஒவ்வொரு முயற்சியிலும் ஓயாத பாடங்கள்...
முயற்சிகளே
ஒருநாளும் சாயாத ஓடங்கள்...
வெற்றிகளின் முதுகில்
தலை கனத்து
அமர்வதைவிட...
முயற்சிகளின் முன்னே தலைநிமிர நினைக்கிறேன்!
வெற்றி என்பது முதுமை
முயற்சி என்பது என்றும் இளமை!
-ஆ.கலைவாணி.