கண்ணன்

கோயிலில் உந்தன் வடிவழகு கற்சிலையைக்
கண்டேன் கண்ணா கொண்டல்வண்ணா-உன்னழகைச்
சொற்கோவையால் கோர்த்து உனக்கொரு
மலர்மாலைச் சூடி வணங்கிட விழைந்தேன்
சொற்கள் ஒன்றும் அமையவில்லை ஏனெனில்
கண்ணா உன்னழகு சொற்களுக்கு அப்பால்
என்பது புலன் ஆனது......கடலைக் கண்டேன்
அதில் உன்னைக் கண்டேன் கண்ணா
நீலக் கடல் உடுத்திய மேனியனே என்று
வாழ்த்திடவா உன்னை சொல்வாய்
காணும் பொருளிலெல்லாம் நீதான் நீதான்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (30-Mar-22, 10:07 am)
Tanglish : Kannan
பார்வை : 169

மேலே