காரிய உறவுகள்
பணம் இருக்கும் வரை, காரியம் ஆகும் வரை இருக்கும் நட்பு
இவை இரண்டுமே இல்லை என்றால் எந்நேரமும் நடக்கலாம் வெளிநடப்பு
ரயிலில் பஸ்ஸில் பயணம் செய்யும் வரை யாரோ ஒருவருடன் சொந்தம்
அவரவர் இடத்தில் இறங்கிய அடுத்த கணமே சொந்தம் ஆகிவிடும் மந்தம்
கல்யாணம் கருமாரி போன்ற நேரத்தில் ஏராளமான உறவுகள் இணைப்பு, பிறப்பு!
அந்தந்த நிகழ்ச்சிகள் முடிந்த அடுத்த நாளிலிருந்து அவ்வுறவுகள் மறப்பு!
நல்லது செய், நேர்வழியே சிறந்தது என்று பிறர் கேட்காமலேயே போதனை!
எதை செய்திடினும் பணமே பிரதானம் என்ற எண்ணம் , இது மிகவும் வேதனை!