பணம் ஒரு வித நோய்
சில்லறை விஷயங்களுக்கு தலையை குழப்பிக் கொண்டு
ஒத்த ரூபாய் வித்தியாசத்தை பெரிது பண்ணிக்கொண்டு
நூறு ரூபாய் கோட்டை விட்டால் கோட்டையே போனது போல்
ஐந்நூறு ரூபாய் ஒரு பொருளுக்கு அதிகம் கொடுத்தோம் என கொதித்து
ஆயிரம் ரூபாய் நண்பர்கள் பார்டிக்கு கொடுத்ததை நினைத்து வெதும்பி
பத்தாயிரம் ரூபாய் பங்கு சந்தையில் இழந்து மனம் உடைந்து
லட்சங்கள் போட்டு வாங்கிய வீட்டை அடிமட்ட விலைக்கு விற்று இடிந்து போய்
கோடி கோடி கொடுத்தாலும் பெற முடியாத அமைதியை தொலைத்து வாழுவது, விவேகமான செயலா???