ஆம்பற்றாள் வாடலே போல அகத்தடக்கித் தேம்பத்தாங் கொள்வது அறிவு – அறநெறிச்சாரம் 88

நேரிசை வெண்பா

தனக்குத் தகவல்ல செய்தாங்கோர் ஆற்றால்
உணற்கு விரும்புங் குடரை - வனப்பற
ஆம்பற்றாள் வாடலே போல அகத்தடக்கித்
தேம்பத்தாங் கொள்வ(து) அறிவு 88

- அறநெறிச்சாரம்

பொருளுரை:

தனக்குத் தகுதியல்லாத காரியத்தைச் செய்து ஒருவாறு உண்ணுதலை விரும்புகின்ற குடலை, நீரற்ற இடத்தில் ஆம்பற்கொடி வாடுதலே போல அழகு கெடவும், இளைக்குமாறும் தாம் உள்ளே அடக்கிக் கொண்டிருப்பது அறிவுடைமையாகும்.

குறிப்பு:

குடர் - குடல்: வனப்புற என்பதும் பாடம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (31-Mar-22, 11:24 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 16

மேலே