சூதுப் போரால் விளையும் தீமை - அறநெறிச்சாரம் 87

நேரிசை வெண்பா

ஓதலும் ஓதி யுணர்தலும் சான்றோரால்
மேதை யெனப்படும் மேன்மையும் - சூது
பொருமென்னும் சொல்லினால் புல்லப் படுமேல்
இருளாம் ஒருங்கே இவை. 87

- அறநெறிச்சாரம்

பொருளுரை:

சூதாடுவான் என்னும் பழிச்சொல்லினால் ஒருவன் பற்றப்படுவானானால்,

அறிவு நூல்களைக் கற்றதும், கற்றவற்றை ஆராய்ந்து உணர்ந்து கொள்வதும், அறிவுடையன் என்று பலராலும் கூறப்படும் பெருமையும் ஆகிய இவை முழுவதும் அவனை விட்டு மறையும்.

குறிப்பு:

பொருதல்-போர் செய்தல்; ஆடுதல், சூதுப் போரால் அறிவு மழுங்கி விடும் என்பது கருத்து,

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (31-Mar-22, 11:18 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 27

மேலே