மிருதங்க விநாயகர் - நேரிசை வெண்பாக்கள்

நேரிசை வெண்பாக்கள்

மிருதங்க நல்விநாய கன்தான் மடியில்
மிருதங்கம் வைத்தே மிடுக்காய் - கருத்தொடு
வாசிக்கின் றானிவனை வேண்டி வணங்கிட
நேசிப்பான் நெஞ்சில் நினைந்து! 1

மிருதங்க நல்வினாய கன்மிடுக்கைப் பார்த்தால்
கருத்தான கண்ணோட்டம் கண்ணின் - பெருமிதத்
தோற்றம்தான்; நாமவனைத் தொய்வின்றி நாதனெனப்
போற்றுவோம் இன்றே புகழ்ந்து! 2

விநாயகர் பட உதவி - தினமலர்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-Apr-22, 8:12 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 9

மேலே