ஆரோக்கியம்
" கை விரல்கள் கால் கட்டை
விரலைத் தொடும் வரை
ஆரோக்கியமாம் !
கைகள் நடு முதுகை தொடும்
வரை ஆரோக்கியமாம் !
கண்கள் ஆகாயத்தை
பார்க்கும் வரை
ஆரோக்கியமாம்!
காதுகள் குறைவான
இரைச்சலைக் கேட்கும்
வரை ஆரோக்கியமாம்!
ஆனால் உதடுகள்
புன்னகைத்தால்
வாழ்க்கை முழுவதும்
ஆரோக்கியமாம்!"