பாவம் யாருக்கு

வயிறு பசித்தவளோ
வறுமையின் பிடியில்
உடல்பசி கொண்டவனோ
பணத்தின் மடியில்..!!

பசித்தவள்
தன் பசியின் தீர்வுக்கு
உடல் பசியை
தீர்த்துக்கொள்ள
அலைந்து திரியும்
மனிதனை நாடினாள்...!!

உடல் பசி தீர்ந்தவன்
வெள்ளிப் பணத்தை
அள்ளிக்கொடுத்தான்...!!

பசி தீர்ந்தவுடன்
இருவரும் தனிமையில்
சிந்தித்தார்கள்
இதில் பாவம் செய்தது
யாரென்று ...??
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (2-Apr-22, 8:59 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : paavam yaruku
பார்வை : 660

மேலே