அறிவே துணை

அறிவே துணை..
---------------

இலக்கினைக் குறித்தலும்
இயன்றதை முடித்தலும் /

கலங்கிடா மனதினைக்
காத்தலும் அறிவே !

கற்றிடப் பெருகிடும்
கண்டிட வளர்ந்திடும் /

உற்றதோர் நண்பனாய்
உனக்குள்ளே வாழுமே !

உயர்வினை வாழ்வினில்
உவப்பொடு அளித்திடும் /

அயர்விலா இன்பமும்
அறிவினால் கூடுமே!

அகலாது உறைந்திடும்
அனுதினம் காத்திடும் /

புகலிடம் அறிவெனப்
புரிந்திடின் வெற்றியே !

-யாதுமறியான்.

எழுதியவர் : -யாதுமறியான் . (1-Apr-22, 9:27 pm)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 145

மேலே