மனம்

மனம்.
ஒரு ஜல்லிக்கட்டு காளை.
அதை அடக்குபவன் வீரன்.
மனம்.
ஒரு சிக்கல் சிலந்தி வலை.
அதில் சிக்காதவன் தீரன்.
மனம்.
ஒரு ஆழ் கடல்.
அதில் முத்தெடுத்தவன் கலைஞன்.
மனம்.
ஒரு இருட்டறை.
அதில் விளக்கேற்றியவன் ஞானி.
மனம்.
ஒரு புத்தகம்.
அதை படித்தவன் மேதை.
மனம்.
ஒரு கலங்கல் நீர்.
தெளிந்தவன் அறிஞன்.
மனம்.
ஒரு குப்பைதொட்டி.
அதை தூய்மை செய்பவன் தூயவன்.
மனம்
ஒரு காந்தகம்.
அதில் நன்மைகளை ஈர்ப்பவன் நல்லவன்.
மனம்.
ஒரு அட்சயபாத்திரம்.
அள்ளிக் கொடுப்பவன் வள்ளல்.
மனம்.
ஒரு அகராதி.
அதில் வார்த்தைகள் கோர்ப்பவன் கவிஞன்.
மனம்.
கடவுள் வாழும் ஆலயம்.
அதில் வழிபடுபவன் புனிதன்.