குடை விநாயகர் - நேரிசை வெண்பாக்கள்

நேரிசை வெண்பாக்கள்

குடைதனைக் தன்வலது கையில் பிடித்து
நடைபோடும் நாயகன் நாதன் - தடைசொல்ல
மாட்டான் விநாயகன்; மாற்றமில்லை எங்களது
வாட்டத்தைப் போக்குவான் வந்து! 1

எங்களின் வாழ்க்கையில் என்றும் வளம்பெற,
தங்கு தடையின்றி தாரணியில் - பொங்கிடும்
இன்பமே பெற்றிட ஈடில்லா பொற்குடை
நன்விநாய கன்தாள் வணங்கு! 2

விநாயகர் பட உதவி - தினமலர்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Apr-22, 7:07 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 14

மேலே