குழந்தை விநாயகர் - நேரிசை வெண்பாக்கள்

நேரிசை வெண்பாக்கள்

நன்றே தவழும் குழந்தை விநாயகனை
என்றும் தொழுதக்கா லெல்லாமும் - அன்றே
அளிப்பா னவன்பாதம் தப்பாமல் ஏத்தி
களிப்பா யிருப்பாய் கனிந்து! 1

தாயார்க்குப் பின்னால் தவழும் குழந்தையாய்
நேயமான பார்வையோடு நோக்கும்வி - நாயகன்
காலமெலாம் நம்மையே காத்தருள்வான்; அன்னவனை
ஞாலமுள்ள நாளெல்லாம் நாடு! 2

கழுத்தில் மணிமாலை கைகளில் தங்க
இழையணி யாம்வளைய லிட்டு - குழைந்தே
மயக்கும் குழந்தை விநாயகன் தாளை
தயக்கமின்றிப் போற்று மகிழ்ந்து! 3

விநாயகர் பட உதவி - தினமலர்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Apr-22, 7:13 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 57

மேலே