மாமாலை - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
பாண்டுடனே மெய்யிற் படர்சோபை யைத்துரத்துந்
தூண்டுநீ ராம்பலெனுந் துன்பொழிக்கும் - பூண்டதோர்
நீரை யிறக்கும் நெடுந்துயரம் ஆற்றிவிடும்
நாரியரே மாமாலை நன்று
- பதார்த்த குண சிந்தாமணி
இது பாண்டுரோகம், சோகை, நீராம்பல் நோய் ஆகியவற்றை நீக்கும்; அதிகமாக நீரைப் போக்கும்