சொல்லும் பொருளும் 2 - வாழ்க வளமுடன்

சொல்லில் ஒரு எழுத்து மாறினாலும் பொருள் மாறுபடும்; ஒரு சொல்லுக்கே பல பொருள் உண்டு. எனவே உதாரணத்திற்கு வளம் என்ற ஒரு சொல்லை இங்கு பார்ப்போம்.

வாழ்க வளமுடன் என்பதை 'வாழ்க வலமுடன்' என்று ஓரெழுத்து தவறாக எழுதினால் பொருள் வேறுபட்டும் கேலிக் கூத்தாகியும் விடும். இத்தகைய தவறுகளுக்கு கவனக் குறைவும், அலட்சியப் போக்குமே காரணம்.

எனவே இரண்டு சொல்லுக்கும் உள்ள பலப்பல பொருட்களை இங்கு தருகிறேன்.

வளம்: வண்மை

1. Fertility, productiveness; luxuriance; செழுமை. வளமுடி நடுபவர் (சீவக. 49)
2. Abundance, fullness; மிகுதி. தொழுதெழுவார் வினைவள நீறெழ (திருக்கோ.118)
3. Advantage; profit; பயன். வாரி வளங்குன்றிக்கால் (குறள், 14)
4. Wealth, riches; செல்வம். வளவரை வல்லைக் கெடும் (குறள், 480)
5. Income; வருவாய். தற்கொண்டான் வளத்தக்காள் (குறள், 51)
6. Goodness; நன்மை. உலவா வளஞ்செய்தான் (பு. வெ. 8, 7)
7. Greatness, excellence; மாட்சிமை. (பிங்)
8. Fitness; தகுதி. (பிங்)
9. Beauty; அழகு. இளவளநாடுபுல்லி (சீவக. 751)
10. Dignity, station; பதவி. (சூடா)
11. Water; புனல். சுனைவளம் பாய்ந்து (திருக்கோ. 118)
12. Food; உணவு. பல்வளம் பகர்பூட்டும் (கலித். 20)
13. Article of merchandise; வியாபாரப்பண்டம். (பிங்.) முந்நீர் வளம் பெறினும் (பு. வெ. 8, 31)
14. Victory, success; வெற்றி. வளந்தரும் வேலோய் (பு. வெ. 9, 9)
15. Path; வழி.
16. Part, side; பக்கம்.

வலம்

1. Army; சேனை. (W.)
2. Strength, power; வலி. வாளின் வாழ்நர் தாள்வலம் வாழ்த்த (புறநா. 24).
3. Victory, triumph; வெற்றி. வலந்தரிய வேந்திய வாள் (பு. வெ. 9, 35).
4. Command, authority; ஆணை. நின்வலத்தினதே (பரிபா. 5, 21).
5. Right side; வலப்பக்கம். இடம்வல மேழ்பூண்ட விரவித்தேர் (திவ். இயற். 3, 73).
6. Circumambulation from left to right; பிரதட்சிணம். மாலிருஞ்சோலை வலஞ்செய்து நாளும் மருவுதல் வழக்கே (திவ். திருவாய். 2, 10, 8).
7. Weight; கனம். (அக. நி.)
8. High place or locality; மேலிடம். (திவா.)
9. Place; இடம். (மலைபடு. 549, உரை.) (சூடா.)--part.
Sign of the locative;
ஏழனுருபு. கைவலத்தியாழ்வரை நின்றது (நன். 302, உரை).

வலம் 2 மலம். Faeces;

வலம் 3 That which is excellent; சிரேஷ்டம். வணக்கொடு மாள்வது வலமே (திவ். திருவாய். 1, 3, 8)

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Apr-22, 12:09 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 20

சிறந்த கட்டுரைகள்

மேலே