பெண்மை வியவார் வீடில் புலப்பகையி னார் - நீதிநெறி விளக்கம் 85

நேரிசை வெண்பா

பெண்மை வியவார் பெயரும் எடுத்தோதார்
கண்ணொடு நெஞ்சுறைப்ப நோக்குறார் - பண்ணொடு
பாடல் செவிமடார் பண்பல்ல பாராட்டார்
வீடில் புலப்பகையி னார் 85

- நீதிநெறி விளக்கம்

பொருளுரை:

புலன்களுக்குப் பகைவராகிய கெடுதலில்லாத துறவிகள் பெண்மை என்னுந் தன்மையைப் புகழ்ந்து கூறார்; பெண்ணென்னும் பெயரையும் எடுத்துரையார்; நெஞ்சில் அவர்கள் உருவம் பதியுமாறு கண்களால் பெண்களைப் பார்க்க மாட்டார்கள்;

தம்மை வயப்படுத்தும் பொருட்டு அவர்கள் இசையோடு பாடும் பாடல்களுக்கும் செவி கொடார்: குணமற்றனவான பிற செயல்களையும் பாராட்ட மாட்டார்கள்.

விளக்கம்:

இச் செய்யுள் முதல் ஆசிரியர் இந்நூல் முடிவு வரை துறந்தோர் தன்மை கூறுகின்றார்.

கருத்து:

ஐம்புலனும் வென்ற துறவிகள் சிற்றின்பத்திற்குக் காரணமான காரியங்களில் ஈடுபடாதிருப்பர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Apr-22, 9:31 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 40

மேலே