நீரூற்று போல் என்னுள் வந்தவளே 555

***நீரூற்று போல் என்னுள் வந்தவளே 555 ***
நிலா அழகே...
பலமுறை தினம் கண்ணாடி
பார்த்து ரசிப்பவன்...
இப்போதெல்லாம் நான்
கண்ணாடியே பார்ப்பதில்லை...
நீ எனக்குள் வந்ததிலிருந்து
நான் பேரழகனாகவே எல்லோருக்கும்...
வானவில்லை புருவமாக்கி
கருத்த மேகத்தை கூந்தலாக்கி...
அணுஅணுவாய் உன்னை
ரசிக்க வைத்தவள் நீதான்...
என் தனிமையில்கூட
உன் நினைவுகள் எனக்கு...
எப்போதும் துணையாக வருமென்று
உணர்த்தியவளும் நீதான்...
கைகளை அசைத்து.
கண்களை விரித்து...
என்னிடம் நீ
பேசும்போதெல்லாம்...
என்னை நான் மறக்கிறேன்
உன்னை ரசித்துக்கொண்டே...
நீ
பேசாத நிமிடங்களில்...
உன் முகத்தில் அங்கங்கு விழும்
சில முடியினை ரசிக்கிறேன்...
நீரூற்றுபோல்
என்னுள் வந்தவள்தான்...
இன்று குருதியாய் என்
உடலெங்கும் ஓடி நிரம்பிவிட்டாய்...
உன்
ஓட்டத்தை நிறுத்திவிடாதே...
நான்
சரிந்துவிடுவேன் மண்ணில்.....
***முதல்பூ .பெ .மணி .....***