அன்பு தோழிக்கு
பயிற்சி நாட்களில் பக்கத்து இருக்கை வேண்டும்
பயண நேரங்களில் வழித்துணையாய் அருகினில் வேண்டும்.,
உணவு வேளைகளில் உரிமையாய் பகிர்ந்திடல் வேண்டும்
காலையிலும் ,மாலையிலும்
முறைப்படி தரிசனம் வேண்டும்.,
தூரத்தில் நிற்கும் போது புன்னகை வேண்டும்
அருகினில் இருக்கும் போது ஸ்பரிசங்கள் வேண்டும்.,,
யதார்த்தமான பேச்சுக்கள் வேண்டும்
ஏகோபித்த மகிழ்ச்சிகளும் வேண்டும்.,
நட்போடு நான் நடை போட வேண்டும்
எப்போதும் குறையாத அன்பு வேண்டும்.,
விரைவில்
தொலையும் கோபங்கள் வேண்டும்
உன் விரலோடு சேர்ந்த
பயணங்கள் உன்னோடு வேண்டும்.,
செல்லமாய் திட்ட வேண்டும்
சேதாரமின்றி அடியும் வேண்டும்
நினைத்துப் பார்த்து
மகிழ்ந்திடும் தருணங்கள் வேண்டும்
கனவின் காட்சிகளில் அவ்வப்போது வேண்டும்
மொத்தமாய் ,
எனக்கான உன் நட்பு வேண்டும்...
அன்புடன் ஆர்கே ..