422

வெகுநாட்களுக்குப் பின்.. அக்கா திருமதி. கோகிலா சமுத்திரம் அவர்களை அவர்கள் இல்லம் சென்று சந்தித்தேன். எப்போதும்போல அளப்பரிய அன்பு. வீடு முழுவதும் அத்தான் வாங்கிய விருதுகள் நினைவுப் பரிசுகளுடன், சாகித்ய அகாடமி விருது அழகு சேர்த்தது..... அக்கா, அத்தான் சு.சமுத்திரம் பற்றி நிறைய பேசினார்கள்.
"உங்க அத்தான் கலந்துக்கிட்ட விழா எல்லாத்தையும் பாரு" மிகுந்த ஆர்வத்துடன் பழைய ஃபோட்டோ ஆல்பங்களை எல்லாம் கொடுத்தார்கள். அவற்றை பார்க்கும் போதுதான், தமிழகம் மட்டுமல்ல தேசிய அளவில் எவ்வளவு பெரிய மனிதர்களிடம் எல்லாம் அவருக்கு நெருங்கிய நட்பு இருந்துள்ளது என்பதை அறிய முடிந்தது...
"இந்தா , இதெல்லா ஒங்க அத்தான் எழுதுன சிறுகதை தொகுப்பு, எடுத்துட்டு போயி படி அமுதா" பேரன்புடன் அள்ளிக் கொடுத்தார்..
உங்க அத்தா கத " சோற்றுப் பட்டாளம்" சினிமாவா எடுத்தாங்கல்லா, இப்பயும் ஒரு படம் எடுத்ருகாக, இப்ப /" ஒரு கோட்டுக்கு வெளியே" கதையையும் படமா எடுக்க போறாங்க, இளையராஜா தான் இசை அமைகிறார், பாக்யராஜ் சார் கூட அதப்பத்தி பேசி யூ டியூப்பில வருது, நீயும் பாரு" என்றபடி அந்த லிங்க்கையும் எனக்குக் கொடுத்தார்கள்.

அத்தானின் புகைப்படங்கள் சிலவற்றை மட்டும் என் கைப்பேசியில் க்ளிக் செய்தேன்.

வீட்டை சுற்றி நிறைய பூச் செடிகள் வைத்து பராமரித்து வருகிறார்... எனக்கும் நிறைய விதைகள் கொடுத்தார்,..

புறப்படும்போது, " அமுதா! நீயும் நல்லா எழுதுறா, ஒங்க அத்தால்லா இப்ப இருந்தாகானா எவ்ளோ சந்தோஷப் பட்டுருப்பாக. .." மிகுந்த ஆதாங்கத்தோடு கூறி, என்னை வழியனுப்பினார்..

அவர் தனிமையை போக்குவது, அத்தான் சு.சமுத்திரம் அவர்கள் எழுதிய 300க்கும் மேலான சிறு கதைகள் 11 நாவல்களும் , செடிக் கொடிகளும் தான் . .... மீண்டும் ஒருமுறை வரும்படி அன்புடன் கேட்டுக்கொண்டார் .

இப்போது என் புத்தக அறையில் அத்தானின் நாவல்களும் பொக்கிஷமாய்....

எழுதியவர் : வை.அமுதா (10-Apr-22, 7:16 pm)
பார்வை : 40

மேலே