422

கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு தடைவிதித்து தீர்ப்பளித்துள்ளது கர்நாடக நீதிமன்றம்.. .
இது சரியா....? தவறா.. ?

கிறித்தவ பள்ளிகள் டயசிஷன் நடத்தும் பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் கன்னிகா ஸ்த்ரீகள் , பாதிரியார்கள் தங்களது மதத்திற்கான அங்கிகள் முக்காடுகள் அணிந்து உள்ளே செல்வதில்லையா?

எம் பள்ளியில் நிர்வாக நியமனத்தில் பணிபுரியும் இஸ்லாமிய ஆசிரியர்கள் , பள்ளியில் பயிலும் இஸ்லாமிய மாணவிகளும் ஹிஜாப் அணிந்துதான் பள்ளிக்கு வருவர். பள்ளி வளாகத்திற்குள் நுழைந்தவுடன் அதை நீக்கி சீருடையுடன் வகுப்பறையில் அமர்வர்.... இதுவரை இது எந்த விதத்திலும் யாரையும் எப்போதும் பாதித்ததே இல்லை.... இன்னும் சொல்லப் போனால் , பிள்ளைகள் இடையே பிற மதத்தைப் பற்றிய புரிதலும் மரியாதையும் அதிகரிக்கிறது... ரம்ஜான் நோன்பு காலங்களில் நோன்பு மேற்கொண்ட மாணவர்கள் மீது ஆசிரியர்கள் தனி கவனம் செலுத்துவர்... ஏன், நானும் சில ஆண்டுகள் எம் மாணவர்களுடன் ரம்ஜான் நோன்பு மேற்கொண்டுள்ளேன்.... இது உண்மையில்
மத நல்லிணக்கத்திற்கு வலிமை சேர்க்கும்...

கல்லூரிகளில் இந்த உடைதான் அணிந்து வரவேண்டும் என்று எதுவும் இந்தியச் சட்டத்தில் உள்ளதா?... ஹிஜாப் ஒரு மதத்தின் அடையாளமாக நினைக்க வேண்டாம். .. ஒரு ஆடை என்றே எடுத்துக் கொள்வோம்..... அவரவர் விருப்பத்திற்கு இணங்க (ஆபாசம் இன்றி) ஆடை அணிவது அவர்கள் சுதந்திரம் தானே.. இதில் நீதிமன்றம் தலையிடுவது சரியா?

எழுதியவர் : வை.அமுதா (10-Apr-22, 7:13 pm)
பார்வை : 27

மேலே