நேசக் கரம் நீஈட்டுவோம்

தீவிரவாதத்தால் தேவாலய குண்டு வெடிப்பு
கொரோனாவால் ஒழிந்த சுற்றுலா வரவு
பொய்த்த விவசாயத்தால் உணவு தட்டுப்பாடு
திறமற்ற கீழான ஆட்சியரின் முனைப்பு

தண்ணீரில் மிதக்கும் இலங்கைத்தீவு இன்று
கண்ணீரில் மூழ்கி தத்தளிக்கிறது
குபேரபூமியென பெயர்பெற்ற நாடு
இருளில் சிக்கித் தவிக்கிறது......

உயிர் பிழைக்க ஓடிவரும் நம்மவருக்கு
உரிய முறையில் அடைக்கலம் கொடுப்போம்
உணவு உடை உறைவிடம் வழங்கி
உறவாய் நேசக்கரம் கொடுப்போம்!

எழுதியவர் : வை.அமுதா (10-Apr-22, 7:12 pm)
பார்வை : 63

மேலே