கராஜன்

ஏன்டா பேரப் பையா, நாகராசா உம் பேரை மாத்திட்டயாமே? உங் கொள்ளுத் தாத்தா பேரு கருப்பையா. உந் தாத்தா பேரு நாகராசன். உன் அப்பன் பேரு கருப்புசாமி. உனக்கு உந் தாத்தா பேரை வச்சோம். அந்தப் பேரைப் போயி மாத்திட்டயாமே நாயமா? ஏன்டா நாகராசா...
@@@@@
பாட்டி இந்தக் காலத்தில தமிழ்ப் பேரு உள்ளவங்கள யாரும் தமிழனாவே மதிக்கிறதில்ல. இந்திப் பேரா இருக்கணும். இல்லன்னா இந்திப் பேரு மாதிரி இருக்கிற ஒரு பேரை வச்சுகிட்டாத்தான் மரியாதை. 'நாக்ராஜ்'னு எம் பேரை மாத்தலாம்னு பாத்தேன். அந்தப் பேருல ஆயிரக்கணக்கான இந்திக்காரங்க இருக்கிறாங்க. 'ராஜ்', 'ராஜா', 'ராஜன்'னு இலட்சக்கணக்கானவங்க இருக்கிறாங்க. அதனால....
@@@@@
அதனால.... என்னன்னுடா நாகராசா உம் பேரை மாத்தி வச்சிட்டே?
@@@@@
உலகத் தமிழர்கள் யாரும் வைக்காத பேரா எம் பேரை மாத்திகிட்டேன்.
@@@@@@
அந்தப் புதுப்பேரைச் சொல்லுடா நாகராசா
@@@@@
என் அதிகாரப்பூர்வமான புதுப்பேரு 'கராஜன்' நல்லா இருக்குதா?
@@@@@
போடா 'கராசா' பேரைப்பாரு. பேரை. கராசனாம்.

எழுதியவர் : மலர் (12-Apr-22, 10:14 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 55

மேலே