கறினா கப்பூரு

கறினா கப்பூரு
@@@@@@@
ஏன்டா தம்பி தங்கராஜு..
@@@@
தங்கராஜு இல்லண்ணா. இதெல்லாம் தாத்தா காலத்துப் பேரு. நான் என் பேரை
'தங்ஜ்'னு மாத்தி மூணு மாதம் ஆகுது.
#@@@@#
சரிடா தங்குஜு. உன்னோட (இ)ரட்டைக் குழந்தைகளுக்கு என்ன பேருங்கள வச்சிருக்கறீங்க?
@@@@@
ஒரு குழந்தை பேரு 'கரினா' இன்னொரு குழந்தை பேரு 'வெரினா'.
(பாட்டி குறுக்கிட்டு):
ஏன்டா தங்கராசு அந்தப் பேருங்கள வச்ச? "கறி, வெறி"னு எதுக்கு டா பேரு வச்ச?
@@@@@@
'கரினா கபூர்'னு ஒரு நடிகை இருக்கிறாங்க. அவுங்க பேரை முதல் குழந்தைக்கு வச்சுட்டோம். (இ)ரண்டாவது குழந்தைக்கு....
@@@@@
இருடா பேரா நாஞ் சொல்லறேன். கறினா கப்பூரு. வெறினா வேப்பூரா?
@@@@@@@
போங்க பாட்டி, பேருங்களக் கிண்டல் பண்ணறதே உங்களுக்கு வேலையாப் போச்சு.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Karina = beloved. Latin, English, Norwegian, Indian, Polish origin.

Verina = sacred wisdom. English, German, Indian origin.

எழுதியவர் : மலர் (14-Apr-22, 7:16 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 72

மேலே