சில நிமிடங்கள் இதற்காகவும்
ஒரு நிமிடம் ஒதுக்கலாமே !!!
---------
ஒரு நிமிடம் ஓடிவிட்டது,
கடந்த நிமிடத்தில்
களிப்புற்றேனா !
ஒரு மணிநேரம் நகர்ந்துவிட்டது, உருப்படியாய்ச்
செய்தது என்ன ?
ஒரு நாள் நடந்துவிட்டது
முயற்சியின்
வெற்றி என்ன ?
ஒரு வாரம் முடிந்துவிட்டது,
முடித்தக்
காரியம் என்ன ?
ஒரு மாதம் கடந்துவிட்டது,
அடைந்த
சாதனை என்ன ?
கோடையும் வசந்தமும் மாறி
அடுத்த ஆண்டும்
ஆரம்பம் ஆகிவிடும்
இந்த ஆண்டினில்
எட்டிய
இலக்குகள் எத்தனை ?
திரும்பிப் பார்க்க
ஒரு நிமிடம்
ஒதுக்கலாமா ?
வெற்றிகள் இல்லா நாட்கள்
மகிழ்ச்சிகள் இல்லா மணிகள்
நிம்மதி இல்லா நிமிடங்கள்
இவைகளே குவிந்து கிடக்கின்றன!
இதுதான் வாழ்க்கையா ?
இதற்குத்தான் பிறந்தோமா ?
-யாதுமறியான்.