சிறகு விரி
சிதைந்த சிறகால்
சிகரம் தொட்டிட முடியாதா?/
இரு சிறகில்
ஒரு சிறகு உடைந்தால்/
மறு சிறகு இருக்குத் தானே
எழுந்து பறந்திட..../
நம்பிக்கையை உன்னில் வை/
முயற்சியை நீயே போடு/
ஒரு சிறகு கொண்டும்
பறந்திட முடியுமே..../
பறந்து செல்ல வா பெண்ணே/
மறைந்து இருந்தது போதுமே/
உன் கூட்டை விட்டு
திறந்து வா பெண்ணே/
திறமைகளை காட்டிட/
உன் சிறகுகளை விரித்திடு/
இவள்
எண்ணங்களின் எழுத்தழகி
அறூபா அஹ்லா