பாராட்டுங்கள்

பாராட்டுங்கள்-- பாராட்டப்படுவீர்கள்.
------------------------
தொலைதூரக் கையசைப்பே சட்டென
தூரத்தைக் குறைத்து விடுகிறது!

இதழோரம் முகிழ்க்கும் சிறு புன்னகையே
இதயத்துள் பட்டாம் பூச்சிகளைப் படபடக்க வைத்துவிடுகிறது!

பாராட்டும் ஒற்றைச் சொல் புதிய உறவுகளின்
பாலமாய்த் தாங்குகிறது !

பெருமழைக்காய் ஏங்கிடும் தரிசுகளாய்-
உள்ளங்களும!
வாழ்த்து மழைகளில் ஆனந்தக் கண்ணீர் வடித்திடும் !

ஓயாமல் காத்துக் கிடப்பதெல்லாம் ஒருவரி பாராட்டுரையால் முற்றுப்பெறுகிறது.

உங்களிடமிருந்து உதிரும் பாராட்டு மொழிகளே உங்களை உச்சத்தில் உயர்த்திவிடும்!!

பாராட்டுவோம் பராட்டப் பெறுவோம் !!

-யாதுமறியான்.

எழுதியவர் : -யாதுமறியான் . (1-May-22, 11:01 am)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 340

மேலே