சூலடையா நிலையை
முகமே கழவாத பெண்ணும்
முடியே திருத்தாத பையனும்
கையினைக் கோர்த்த படியே
சுற்று கின்றனர் காதலென
ஒத்த பெண்ணும் அவளோடு
நான்கு பையன்களும் அணியாய்
நடந்தபடி எங்கும் இணைந்தே
வளர்கின் றனரே நட்பையும்
கைபேசி உருகும் அளவு
பலவகை கதைகளை பேசியே
பெற்ற பிள்ளையை பார்க்கா
நிலையில் உள்ளனர் பெண்களும்
புணர்ந்து இன்பம் கண்டு
சூலினை கொள்ளும் நிலையில்
பதறா மனநிலை யிலேயே
அதனை அழிக்கவே துணிந்தே
இன்றைய காதலர் யாவரும்
மகிழ்வாய் இருந்தே எடுக்கிறார்
மானிடம் ஒவ்வா முடிவை
இனிமேல் சூலடையா நிலையை
----- நன்னாடன்.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
