காதல் மசோதா
வீடாளும் மன்றத்தில்
எதிர்க்கட்சிக் காரர்கள் ஆகிய
தந்தை,
தங்கை,
தமயன்
ஆகியோரின் கடும் அமளிகலுக்கு மத்தியில்
என் தாயிடம் தாக்கல் செய்தேன்
என் காதல் மசோதாவை
அவரோ கோப்புகளை சரிபார்த்து விட்டு சாதித் தலைவர்களின் ஒப்புதலை கேட்க போயிருக்கிறார்.
ஒப்புதலா கிடைக்கப் போகிறது?