தன்னை உணர்ந்தாள்
தன்னை உணர்ந்தாள்
அரங்கம் ஒன்று
வந்தவர்களால்
நிறைந்திருந்தது
பலரின் பார்வை
அதோ அந்த
பெண் மீது
அழகு என்பதை
நீங்கள் எப்படி
நிர்ணயிப்பீர்கள்?
எதுவும் எனக்கு
தெரியாது
நிறம் உடை உடல்
மூன்றும் அவளிடம்
பலரின் பார்வை
தன் மீது
உணர்ந்தவள்
மனமோ
ஆகாயத்தில் பறந்து
கொண்டிருக்க
அவளின் அருகே
சென்று முகத்தின்
மீது முத்தமிட்டேன்
சட்டென தன் நிலை
மறந்து
பட்டென முகத்தில்
அடித்து..!
ஐயோ..! கொசு
மரணித்தபடி அவள்
கையில் நான்
எரிச்சல் தாளாமல்
சூழ்நிலை மறந்து
சொறிந்து கொண்டாள்
எல்லாம் முடிந்து
திரும்பி பார்க்க
வெளிச்ச பார்வைகள்
அவள் மீது
ஆடவர், காமிரா
எல்லாமே