இத்தனையும் இரசிக்கிறேன் இசைபாடும் மழையின் அழகில்⛈️⛈️😘😘😘🤩🤩
கண் இமைக்காமல் பார்த்து
கொண்டு இருக்கிறேன் காதலில்.....
ஒளியை பார்த்து
ஒளிந்து கொள்கிறேன் ஓசையில்......
கருமேகத்தை கண்டு
கண்ணை சிமிட்டுகிறேன் ஆசையில்......
மழையின் மண்வாசனையை
மனதிற்குள் புதைக்கிறேன் நினைவுகளில்....
இயற்கை அழகை இரசிக்கிறேன்
இளமைபருவ போதையில்......
இத்தனையும் இரசிக்கிறேன்
இசைப்பாடும் மழையின் அழகில்........
உங்கள்
😍தமிழ் அழகினி✍️