தாங்கிடும் வைக்கோல்

நெல்லில் தோலது நீங்கின் அரிசியாம்
அரிசியும் வெந்தபின் உணவாய் சோறாம்
நெல்லது தோலோடு நீரினால் ஊறினால்
நாற்றென முளைத்து பயிராய் வளரும்

வளர்ந்தது முற்றியே நெற்களின் கதிராய்
கதிரினில் மணிகளை பிரித்தப் பின்னால்
விளைந்த தண்டுகள் வைக்கோல் என்பதாய்
விலங்குகள் உண்ணும் உணவாய் மாறிடும்

மனிதரும் தங்கிடும் குடிசையில் கூரையாய்
கட்டிட கயிரென திரித்திட உறுதியாய்
பிரியென சுற்றியே பரியையும் கட்டலாம்
அடுக்களை பொருளை வைக்க பிரிமனை

செங்கல் சூளையில் பரப்பி பூசவும்
பிணத்தை கிடத்தி இறுதி யாத்திரை
செய்யும் நிலையில் தாயின் மடியாய்
மாறியே எவரையும் தாங்கிடும் வைக்கோல்
---- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (12-Apr-22, 9:51 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 37

சிறந்த கவிதைகள்

மேலே