தந்நலமற்றோரே தனிப்பெறா நட்பினர் - அறநெறிச்சாரம் 95
நேரிசை வெண்பா
நட்டாரை வேண்டின் நறுமென் கதுப்பினாய்!
விட்டாரை யல்லால் கொளல்வேண்டா - விட்டார்
பொறிசுணங்கு மென்முலைப் பொன்னன்னாய்! உய்ப்பர்
மறிதர வில்லாக் கதி 95
- அறநெறிச்சாரம்
பொருளுரை:
நறுமணம் பொருந்திய மெல்லிய கூந்தலையுடையாய்!
நட்பினரையடைய விரும்பின் பற்றற்ற பெரியோர்களை யல்லது பிறரை நட்பினர்களாகக் கொள்ள வேண்டா;
பொலிவினையும் தேமலையும் மென்மையினையுங் கொண்ட கொங்கையினையுடைய இலக்குமி போன்றவளே!
அப்பற்றற்ற பெரியோர்கள் பிறவாமைக் கேதுவாகிய வீடுபேற்றினை யடைவிப்பர்!
குறிப்பு:
விடுதல் - ஈண்டுப் பற்றை விடுதல்; தன்னலமற்று வாழ்தல்.
மறிதல் - மடங்குதல்; திரும்புதல்,