வியாபார கல்வி

விடிந்தும் விடியாத அதிகாலை நேரமது!

திண்ணையில் படுத்திருந்த கருப்பசாமி தூக்கமின்றி தவித்து கொண்டிருந்தான்.

சூரியன் மெல்ல மெல்ல தனக்கு அறிமுகம் இல்லா தன் காதலியை காண வரும் ஒரு தலை காதலனாய் தூரத்தில் எட்டி பார்த்து கொண்டிருந்தது.

குளிர்ந்த காற்று சற்று இதமாய் வருடி சென்று கொண்டிருந்தது.

தன் தலை மேல் கை வைத்து குளிர் காற்றின் காதல் ராகங்களுக்கு புன்முறுவல் பூத்து கொண்டிருந்தான்.

தென்றலும் தேனாய் ராகம் பாடுவதாய் அவனுக்குள் ஓர் நினைப்பு.

தன் அத்தை மகள் ராக்காயியை பெண் பார்க்க சென்ற போது வருடிய அதே தென்றல் முப்பது வருடங்கள் ஆனாலும் இப்போதும் வருடுவதாய் நினைவலைகள் அவனோடு விளையாடி கொண்டிருந்தது.

தென்றலோடு காதல் செய்து கொண்டிருந்த சண்டாளன் திடீரென ஏதோ முடிவில்லா ஓர் எல்லைக்குள் தான் விழுந்து கொண்டிருப்பது போல ஓர் உணர்வு!

தத்ரூபமாய் அவனை திண்ணையில் இருந்து கீழே தள்ளி விட்டது.

அவனுக்கு வயது ஐம்பதுகளின் இறுதியில் இருந்தாலும் நல்ல திடகாத்திரமான உடல் தான்.

‘தடால்’ அவன் விழுந்த சத்தம் அந்த அமைதியோடு போர் செய்து வென்றிருந்தது.

வீட்டிற்குள் உறங்கி கொண்டிருந்த ராக்காயி பதறி அடித்து கொண்டு எழுந்தாள்.

“என்ன மாமா சத்தம் அங்க” என பதற்றத்தோடு குரல் கொடுத்து கொண்டே ஓடி வந்தாள்

“ஒன்னுமில்ல ட்டி! நீ தூங்கு” என முதுகை தேய்த்து விட்டவாறே தனக்கும் ஆறுதல் சொல்லி கொண்டான் கருப்பசாமி.

“ச்ச., இந்த மனுஷனுக்கு என்ன தான் ஆச்சோ! ஒரு வருஷமா இப்படி தான் தூக்கத்துல என்னத்தியாது நெனச்சிகிட்டு தவிக்குது! தனியாவே பினாத்துது” என தன் கிழிந்த சேலையில் முந்தானையால் மூக்கை சீந்தி கொண்டாள்.

தன் புருஷன் பார்க்காதவாறு கண்ணையும் துடைத்து கொண்டாள் ராக்காயி.

தன் வலியை மறைத்து கொண்டு சிரித்து கொண்டான் கருப்பசாமி.

மெல்ல எழுந்து தன் வீட்டு முடுக்கு வழியே தோட்டத்திற்கு சென்று கொண்டிருந்தான் கருப்பசாமி!

அவர்களின் ஒரே வீடு இவர்களுக்கு ஓட்டாளும், தனது மகனுக்கு மட்டும் காங்கிரீட்டாலும் செய்யப்பட்டிருந்தது.

இரண்டு வருடத்திற்கு முன்பு வரை இவர்களின் கனவு அனைத்தையும் இடித்து விட்டு இரண்டு மாடி கட்டுவது தான்.

அவர்களின் சிறிய வயலும், ராக்காயியின் நகைகளும், தன் பையன் அறிவின் பிஎச்டி படிப்பும் அவர்கள் கனவை நியாயமாக தான் தோன்ற வைத்திருந்தது.

ஆனால் இன்று கனவும், நடைமுறையும் பல கிலோமீட்டர் தூரமாக எட்டி சென்று விட்டது.

கருப்பசாமிக்கு வயலை விற்றதை விட, தன் ஆசை மாமன் மகள் ராக்காயியின் நகைகளை விற்றது தான் அதீத ஏமாற்றத்தை கொடுத்தது.

அன்றில் இருந்தே இவ்வாறு தான் அரை மனதோடு தான் உலாவி கொண்டிருக்கிறான்.

“நம்ம யாருக்கு பன்னுதோம்! நம்ம புள்ளைக்கி தானே! அவன் தான மாமா நமக்கு உலகம், அவன் நம்மள வச்சி கஞ்சி ஊத்துவான்!” என அடிக்கடி ஆறுதல் சொல்லி ராக்காயிக்கு அலுத்து போனது.

“எதுக்கும் அசராத என் மாமன், உடஞ்சி கெடக்கு இப்படி” என அடிக்கடி இவளும் தனிமையில் அழுது கொள்வாள்.

ஆனால் இருவரின் சிரிப்பும் ஒரு நாளும் தன் மகன் அறிவின் முன்னிலையில் லேசாக கூட முகம் சுழித்ததில்லை.

அவன் பெயர் அறிவு!

Dr. அறிவு, ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் வாங்கியவன் அவன், வயதோ இரௌபத்தி ஒன்பது.

சிறு வயதில் இருந்தே எழுத்து கூட்டி படிக்காத தன் தந்தை அறிவிற்கு சொல்லி கொடுத்தது இரண்டு தான்.

ஒன்று அம்பேத்கர், இன்னொன்று கல்வி!

“எப்படியாது படிச்சிருல மக்கா! நமக்கு படிப்பு தான் எல்லாம், இந்த ஒத்த படிப்புக்கு தான் அத்தன பெரிய மனுஷன் போராடி, ரத்தம் சிந்தி, உயிர கொடுத்து படாத பாடு பட்டு நமக்கு எல்லாருக்கு படிக்க உரிமைய வாங்கி தந்திருக்காவ! நல்லா படிச்சி நாலு பேருக்கு படிப்பு சொல்லி கொடுக்குற பெரிய ஆளா வரனும்ல மக்கா” அறிவின் சின்ன வயதில் வேட்டியை மடித்து கட்டி கொண்டு அறிவை சைக்கிலின் கேரியரில் வைத்து கொண்டு சைக்கிலை உருட்டியவாறே பள்ளிக்கு அழைத்து செல்லும் கருப்பசாமியின் அன்றாட பாடம் அது.

கருப்பசாமி கடும் உழைப்பாளி, அவன் தந்தை சுதந்திர போராட்ட தியாகி, உதவி என எவரிடமும் சென்று நின்றிடாது, தன் கடின உழைப்பால் உயர்ந்தவன். அதனாலேயே அவனுக்கு அதிகமாய் பணம் இல்லாவிட்டாலும் அதிக மரியாதை ஊரில் உண்டு.

என்றும் மடித்து கட்டப்பட்டிருக்கும் கருப்பசாமியின் வேட்டி பள்ளி இவர்கள் கண்ணில் கீழே இறங்கி விடும்.

தன் தந்தைக்கு பள்ளிக்கு சென்ற ஒரு சில வாரங்களிலேயே கையெழுத்து போட சொல்லி கொடுத்து தன் தந்தையின் அந்தஸ்த்தை உயர்த்தியவன் அறிவு.

தன் மகனை நினைத்து கருப்பசாமிக்கு அத்தனை பெருமை.

அறிவுக்கு அளவுக்குடந்த பாசம் தன் தந்தை மீது!

வெற்றிகரமாக தன் பத்தாம், பன்னிரண்டாம் வகுப்பில் பள்ளியில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்று தன் தந்தைக்கு பெருமை சேர்த்தான் அறிவு!

தன் மகன் முதல் மதிப்பெண் எடுத்தான் என்பதை விட, ஊரிலே பெரிய மச்சி வீட்டுக் காரர் பன்னையாரின் மகளை விட அதிக மதிப்பெண் எடுத்து விட்டான் என்பதில் கருப்பசாமிக்கு இன்னும் அதிக பெருமை தான்.

“என்னல மக்கா அடுத்து படிக்க போறா?” என தன் மகனிடம் கேட்டவுடன் “ஆங்கில பேராசிரியர் ஆகனும்” என்ற தன் மகனின் பெருமையை இன்னும் உச்சத்திற்கு கொண்டு சேர்த்தது.

தன் ஊரு வக்கீலு சார்வால் கிட்ட கொண்டு போயி தன் மகனை விட்டு விட்டு “இவர் தாம்ல மக்கா நம்ம ஊர்லயே நிறைய படிச்ச நல்ல மனுசன், இவர்கிட்ட கேட்டு எப்படி வாத்தியார் ஆவனும்னு தெரிஞ்சிக்க” என சாஷ்டாங்கமாக வக்கீலுக்கு ஒரு கும்பிடை போட்டு விஷயத்தை சொல்லி விட்டு வெளியே செல்ல நினைத்தார்.

வக்கீலோ வலுகட்டாயமாக அவரை தன் முன் கிடந்த சோபாவில் உட்கார வைத்தார்.

தன் மனைவியிடம் “ஏம்மா! கருப்பசாமி அண்ணன் வந்திருக்காப்ல அவருக்கும் அறிவிற்கும் பனங்கற்கண்டு தூக்கலாக காப்பியும், அந்த பனங்கிழங்கையும் எடுத்து கொடு” என தனக்கே உரித்தான கம்பீர குரலில் சொன்னார் வக்கீல்

“என்ன கருப்பசாமி அண்ணே! நல்லாருக்கியலா! அறிவு எப்படி மக்கா இருக்க! வாழ்த்துக்கள் மா” என இனைமையான குரலில் முகம் மலர் வெள்ளி டம்ளரில் காப்பியும், ஒரு தட்டில் பனங்கிழங்கையும் எடுத்து கொண்டு வைத்தாள் வக்கீலம்மா.

அவளை கண்டதும் வேகமாக எழுந்து வணக்கம் சொல்லி “நல்லாருக்கேன் அம்மா! நீங்க நல்லாருக்கிங்களா?” என நலம் விசாரித்தார்.

“அட என்னணே நீங்க! அவ சின்ன புள்ள, அவள போயி அவங்க இவங்கனு கூப்டுகிட்டு” உரிமையில் கடிந்து கொண்டார் வக்கீல்.

வெள்ளி டம்ளரை வாங்கி கொண்ட கருப்பசாமி சிரித்து கொண்டார். இதற்கு தான் எத்தனை எத்தனை போராட்டங்கள் என்று.

“அந்த கிழங்க எடுத்து தின்னுட்டே குடில மக்கா!” என உரிமையில் அறிவிடம் அறிவுரை சொன்னார் வக்கீல்.

“எடுத்து கூச்சபடாம சாப்டுடே!” என மடியில் ஒரு கிழங்கை எடுத்து வைத்தாள் வக்கெலம்மா.

“என்ன மக்கா படிக்கனும்னு இருக்கா?” என தானும் காப்பி குடித்தவாறே விசாரித்தார்.

“ஆங்கில பேராசிரியர்” என பணிவாய் சொன்னான் அறிவு.

“சூப்பர் ல மக்கா! இப்போலாம் சட்ட பல்கலைக்ழகங்களுக்கே நிறைய ஆங்கில பேராசிரியர் தேவபடுதாங்க, நம்ம புள்ள நீ, நல்லா படிச்சி, நாலு பேருக்கு உதவி பன்னனும்ல மக்கா” என உரிமையோடு சொல்லி கொண்டே ஒரு கடிதம் எழுதி அவன் கையில் கொடுத்தார்.

“எப்படியாது பிஎச்டி முடிச்சிரு மக்கா! என BA, MA, மற்றும் NET, SET என அனைத்து தகுதிகளையும் சொல்லி கொடுத்தார் வக்கீல்.

ஆர்வமாக மனதுக்குள் பெற்று கொண்டான் அறிவு.

தானும் இந்த சமூகத்திற்கு நல்லது செய்ய வேண்டும், பலரை படிக்க வேண்டும் என தனக்குள் மிக ஆழமாய் முடிவெடுத்து கொண்டான் அறிவு.

இருவரும் நன்றி சொல்லி விடபெறும் வேளையில் தன் பாக்கெட்டில் இருந்த இரண்டு ஆயிரம் ருபாய் நோட்டை வேகமாக எடுத்து அறிவின் சட்டை பாக்கெட்டில் வைத்தார் வக்கீல்.

இருவரும் வேண்டாம் வேண்டாம் என தடுத்தனர்.

“நீ நம்ம புள்ளல மக்கா!” என உரிமையோடு போயிட்டு வா ல காலேஜ்ல சேந்துட்டு என்ன வந்து பாரு என உரிமையோடு வழி அனுப்பி வைத்தார் வக்கீல்.

அறிவு முழு மூச்சாய் படித்தான்.

ஆரம்பத்தில் கொஞ்சம் ஆங்கிலம் கஷ்டமாக இருந்தும் போக போக பழகி கொண்டான்.

மூன்று ஆண்டுக்கு முன்பு பிஎச்டி இவன் முடிக்க, இவன் தந்தை பெயரில் அந்த சிறு வயல் பன்னையார் பெயரில் மாறி இருந்தது.

ஓராண்டாய் பிஎச்டி முடிச்சி வேலைக்கு சேர வேண்டும் என்ற கனவோடு ஒவ்வொரு கல்லூரியாக தன் படிப்பிற்காக தந்தையின் நிலத்தை விற்ற குற்ற உணர்ச்சியில் அவன் ஏறி இறங்காத கல்லூரி இல்லை.

வக்கீல் ஐயா உதவியுடன் சென்று பார்த்த எந்த தனியார் கல்லூரியிலும் வேலை நிரந்தரமோ, தன் தந்தையின் நிலத்தை மீட்டு கொடுக்கும் சம்பளமோ உத்திரவாதம் அளிக்கப்படவில்லை.

வக்கீலய்யா தன் நண்பரின் நண்பர் என ஒருவரின், ஒரு பேராசிரியரின் நம்பரை சிரமப்பட்டு இவனுக்கு வாங்கி கொடுக்க அறிவும் நேரில் சென்று அந்த நபரை பார்த்தான்.

அது மிகவும் உயர்தர அரசு கல்லூரி.

அங்கு வேலையில் சேர்ந்து விட்டால், இவன் விற்ற நிலம் மட்டுமல்ல, இன்னொரு நிலமும் கூட வாங்கி, வீட்டை இடித்து கட்டி விடலாம்.

அந்த பேராசிரியரோடு உரையாடினான்.

அவர் சொன்ன அத்தனை தகுதியும், கல்லூரியில் முதல் மாணவன் என்ற தகுதியும் இவனிடம் இருந்தது.

“ஒரு வருஷம் இங்கயே காண்டிராக்ட்ல வேல பாரு, அப்றம் Call for பன்னுவாங்க சேர்ந்திரு,” என மிக எளிமையாய் சொல்லி முடித்தார் அந்த பேராசிரியர்

இவனுக்கு மகிழ்ச்சி பொறுக்கவில்லை, சிரமம் பார்க்காமல், அந்த சிட்டியில் எப்படியோ ஒரு வருடமாய் தப்பித்து பிழைத்து கல்லூரியில் வேலை செய்து வந்தான்.

அவன் காத்து கிடந்த அந்த தருணம் வந்தது. இவனின் புத்திசாலித்தனம் அங்கு பல மாணவர்களை, பேராசிரியர்களை கவர்ந்திருந்தது.

நிரந்தர வேலை தனக்கு நிச்சயம் உண்டு என நம்பிக்கையில் இவன் apply செய்து வைத்தான்.

அப்போது தான் அவன் தலையில் ஒரு அனு குண்டு போடப்பட்டது.

“இந்த நிரந்தர வேலை பெற மூன்று வருட சம்பளம், அதாவது தோராயமாக இருபது லட்சம் (20,00,000) கேட்கப்படுகிறது”

மூத்த பேராசிரியர் வாங்கி பல மாநிலத்தின் உயர் இடத்தில் இருப்பவருகு கொடுக்க வேண்டும் என இதுவே ஒரே வழியாய் அவனுக்கு சொல்லப்பட்டது.

இடிந்து போய் தன் தாயின் மடியில் உடைந்து போய் அழுது கொண்டிருந்த அறிவின் கைகளில் தன் தங்க சங்கிலிகளை வைத்தாள் ராக்காயி.

இன்னும் கதறி அழுத அறிவை பெற்றோர்கள் “படிப்பு தான் மக்கா எல்லாம்! நீ நாலு பேர நல்லபடியா படிக்க வை” என ஆறுதல் சொல்லி அங்கும் இங்குமாக கடன் வாங்கி இருபது லட்சத்தை ஏற்பாடு செய்து கொடுத்தனர்.

எல்லோரின் கண்ணீரோடு பணம் பாதாளம் வரை பாய்ந்தது.

இவனிடம் சம்பிரதாயத்திற்காக இண்டர்வியூ என்ற பெயரில் இரண்டு கேள்விகள் கேட்கப்பட்டது.

இன்று அவன் ஓர் உயர்தர Professional Course பல்கலைகழகத்தில் பேராசிரியர்,

அவன் வேலைக்கு சேர்ந்து இன்றோடு ஓராண்டு ஆகிறது.

அறிவிடம் இன்று ஓர் மாணவன் படிக்கிறான்.

அறிவை போலவே அவனும் படு கெட்டிக்காரன், சமூகத்திறாக உழைக்க வேண்டும் என அவன் இரத்தம் கொதித்து கொண்டிருந்தது.

எந்த பெண்ணின் கண்ணும் மாயம் செய்து நெஞ்சத்தை களவாடி விடும் அந்த வயதிலும் அவனுக்கு புத்தகம் வைத்திருக்கும் பெண்கள் மட்டுமே அழகியாக தெரிந்தார்கள்.

அரசியல் பேசும் பெண்களே அவனுக்கு அர்த்தமுள்ளவர்களாக தெரிந்தார்கள்.

ஆனாலும் பல நேரம் புத்தகங்களோடு மட்டும் தான் காதல் செய்து கொண்டு இருந்தான் இந்த சரவணன்.

அறிவு பணம் கொடுத்து கல்லூரியில் சேர்ந்த பொழுது நாம் எப்படி வேலையில் சேர்ந்தாலும் I Should never encourage this kinda corruption culture என தனக்குள் தானே வியாக்யானம் பேசி கொண்டாலும்

எதார்த்தம் வேறாக தான் இருந்தது.

இன்று சமூகத்தின், சக மனிதன் மீது செலுத்தப்பட வேண்டிய காதலுக்கு முன்பாகவே பணத்தின் அத்தியாவசியத்தை எல்லோருக்கும் சொல்லி கொடுத்தான்.

அதில் சரவணனும் அடங்குவான்.

அந்த நுகர்வு கலாச்சார சிட்டியும், பேராசிரியரின் வார்த்தையும், கேட்பாரற்று கிடக்கும் சமூகமும் இவனை கொஞ்சம் தலை குனிய தான் செய்தது

மெதுவாக தேய்த்து கொண்டான் திண்ணையில் இருந்து கீழே விழுந்த கருப்பசாமி கூனி குறுகி குனிந்தவாறே….

எழுதியவர் : அஸ்வின் ரோம் பொன் சரவணன் (18-Apr-22, 11:01 am)
சேர்த்தது : Aswin RPS
Tanglish : viyabhara kalvi
பார்வை : 135

மேலே