பழம்புளி - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா
(‘ர்’ இடையின ஆசு)

தீதில் பழம்புளியைச் சேர்க்கத் திரிதோஷம்
வாதமொடு சூலைகபம் மாறுங்காண் - ஓதுசுரஞ்
ச’ர்’த்தியென்ற தோஷமிவை சாந்தமாங் கண்ணோய்போம்
பித்தமென்ற பேர்ஒழியும் பேசு

- பதார்த்த குண சிந்தாமணி

நல்ல பழம்புளியால் முத்தோடம், வாத நோய், சூலை, சிலேட்டுமம் கோபம், ரூட்சை, வாந்தி, விழிநோய், பித்தம்இவை நீங்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Apr-22, 3:37 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 19

மேலே