அவள்..!!

என் வாழ்க்கையாக அவள்..!!

அவள் வாழ்க்கையில்
நான் வந்து போகும் தென்றல்..!!

மனதுக்கு இதமான
நேரங்களில் மட்டும்
என்னை அழகாக ரசிக்கிறாள்..!!

மற்ற நேரங்களில்
அவள் புயலாக மாறி
என்னை வதைக்கிறாள்..!!

மனம் படும் பாட்டை
மங்கையவள் அறிவாலோ
மன்னனின் கண்கள்
எப்போதுமே கண்ணீரில்
மூழ்கிக் கொண்டிருக்கிறது..!!

எழுதியவர் : (19-Apr-22, 6:52 pm)
பார்வை : 96

மேலே