விழிநீரை துடைக்க வருவாயோ 555

***விழிநீரை துடைக்க வருவாயோ 555 ***
உயிரானவளே...
திருவிழா கூட்டத்தில் தொலைந்த
குழந்தையை போல...
உன்னை தொலைத்துவிட்டு
தேடுகிறேன் இன்று பூமியெங்கும்...
குளத்தில்
தண்ணீர் வற்றிப்போனால்...
மீன்கள் எல்லாம்
பறவைகளுக்கு இரையாகும்...
உன் காதல்
என்மீது குறைந்துவிட்டால்...
என் உயிர்
மண்ணிற்கு இரையாகும்...
என் விழிநீரை துடைக்க
உன் கைகள் இல்லை...
எனக்காக துடிக்க
இதயம்கூட மறுக்கிறது...
விதியை அழைக்கிறேன்
வாழ்வை முடித்திட...
மரணித்தாலும் சில நிமிடம்
வாழுமாம் இதயம்...
அந்த நிமிடமாவது
என்னருகில் வந்துவிடுவாயா...
வந்துவிட்டேன் உன்
இறுதி ஊர்வலத்திற்கு என்று...
இரவெல்லாம் ரசித்து பார்ப்பேன்
நிலவாக உன்னை நினைத்து...
பகலெல்லாம் மறைந்துவிடுகிறது
நிலவு உன்னை போலவே...
என்னுடன் வருகிறது
நாம் சேர்ந்து பயணித்த...
அந்த நொடிகள்
மட்டும் எனக்காகவே.....
***முதல்பூ .பெ .மணி.....***