உங்களுக்காக ஒரு கடிதம் 1

அன்புத் தோழியே/தோழனே,
உனக்காய் தினம் ஒரு கடிதம் எழுத முடிவெடுத்தேன். ஆனால் கடிதம்....கடிதங்கள் மறைந்து வெகு காலமாகிவிட்டதே. இப்போதுதான் whatsapp ... facebook .... twitter .... டெலிகிராம்....என்று கைக்குள்ளேயே எல்லாம் வந்து, சர்வமும் digital மயம் ஆகிவிட்டதே...இனி கடிதம் எழுதினால் எடுபடுமா? என்ற கேள்வி உறுத்தினாலும்... நேரு இந்திராவுக்கு எழுதிய கடிதங்கள்...காந்தி எழுதிய சத்திய சோதனை...கலைஞர் எழுதிய உடன்பிறப்புக்கு கடிதம்...எல்லாம் என் கண் முன்னால் வந்து என்னை ஊக்கப்படுத்தியது. உந்தி தள்ளியது.
ஏனென்று தெரியவில்லை. இந்த எண்ணம் என் நெஞ்சில் நெடுநாட்களாய் தோன்றி...தோன்றி...மறைந்து கொண்டிருந்தது. ஒரு முடிவுடன் பேனாவை எடுத்துவிட்டேன்...மையையும் நிரப்பிவிட்டேன். இதோ எழுதவும் தொடங்கிவிட்டேன்.
ஆனால் திடீரென்று ஒரு குழப்பம்.என்ன எழுதுவது? எதைப்பற்றி எழுதுவது? மனதில் ஆர்ப்பரிக்கும் எண்ண அலைகளின் ஓசை ஒரே கூச்சலாய் என் காதில் கேட்டுக்கொண்டும்...என் தூக்கத்தை கெடுத்துக்கொண்டும் இருக்கிறது. Come what may? துணிந்து இறங்கிவிட்டேன். எப்படி எழுதுவது? கட்டுரையாவா?... கவிதையாவா?... ஆலோசனையாவா?... ஆதரவாகவா?....கடுமையாய் சாடி எழுதுவதா?...இல்லை அனுசரணையாகவா?..தெரியவில்லை.ஆம் புரியவில்லை...
Advice.... இன்றைய இளைய சமுதாயம் ஏற்றுக்கொள்ளாதே? Suggestions .... எல்லாம் எனக்குத்தெரியும் என்று புறந்தள்ளி விடுமே! என்ன செய்ய?
தாய்க்காகவா? தந்தைக்காகவா? மகனுக்காகவா? மகளுக்காகவா? சொந்தபந்தங்களுக்காகவா? நட்புக்காகவா? இல்லை சமுதாயத்திற்காகவா? புரியவில்லை.குழப்பம் தீரவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். எப்படியும் என் மனதில் தோன்றுவதை பகிர்ந்து கொள்ளப்போகிறேன். பதிவும் செய்யப்போகிறேன்.
அதனால்தான் அன்புத் தோழனே...அன்புத் தோழியே...என்று ஆரம்பிக்கிறேன். ஏனென்றால் மற்றவர்களிடம் எதிர்பார்ப்பு அதிகம் இருக்கும். பல காரணங்களுக்காய் புரிதலில் குழப்பம் இருக்கும். ஆனால் தோழமையில்...நட்பில்... அப்படியில்லை. நட்புக்கு ஒரு பலம் இருக்கிறது. நட்பு வட்டாரத்தில் பல பரிமாற்றங்கள் மிக எளிதாய்...மிக சரியாய்... freeயாய் பகிர்ந்துகொள்ள முடியும்.
இதிலும் பல சிக்கல்கள் இருக்கிறது. தோன்றுவதை...தோன்றுவதைப் போலவே எழுதிட முடியுமா? நான் எழுதப்போவது என்னுடைய கோணம்...எனக்கு எல்லாம் சரியாகப்படும். எல்லோருக்கும் சரியாகப் படுமா? கோணங்கள் மாறும்....புரிதலும் மாறும்....எதிர்பார்ப்பு கூடும்...ஏமாற்றம் ஏற்படும்...பாராட்டத் தோன்றும்...கோபமாய் தர்க்கமிடத் தோன்றும்....குப்பையாய்த் தூக்கி வீசிடவும் முடியும்.அதனால் என் மனதில் ஊறும் எண்ணங்களை...ஏக்கங்களை... கோபங்களை... கனவுகளை...அரிப்புக்களை...முடிந்தவரை, அப்படியே...எளிதாய் பகிர்ந்து கொள்ள முயலுகிறேன். எதுவானாலும் உங்கள் கருத்துக்களை உடனுக்குடன் பகிருங்கள்.
சந்திப்போம்.

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (20-Apr-22, 9:43 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 181

மேலே