அன்பு அதுவே திறவு கோல்
தாயின் அன்பில் மெய் மறந்து உறங்கும் மழலை மொழி அன்பு
தந்தையின் பாசத்தில் விழும் அடிகூட அதுவே!
தோழர்களுடன் தோள்மீது கைபோட்டு கொண்டு சுற்றவைப்பதும் அதுவே!
அன்பின் மொழி மென்மையானது சில தருணங்களில்
மிகவும் வன்மையானதும் அதுவே!
அன்பு இல்லாத உலகம் ஏதுமில்லா வெற்று பாலை நிலம்
மருதம் போல வளமான வாழ்க்கையை பெற
அதுவே திறவு கோல்