எமனும் தெரிவானே

நாயினை வளர்ப்பது இன்று நாகரீகம் ஆனது
நோயினைச் சொல்வதே பெரிய மதிப்பாய் போனது
வாயினால் மட்டுமே வல்லபம் காட்டிடும் மனிதராய்
ஆயினர் இன்றைய மக்கள் யாவரும் ஞாலத்தில் --- (க)

அழுதிட எதுவும் மாறிடுமோ சாதமாய் நமக்கு
பழதின்றி உடலும் பலகாலம் இருக்குமோ செழிப்பாய்
உழவின்றி உணவும் கிடைக்குமோ எவருக்கும் மாற்றாய்
குழவியே பிறக்காத சூழலானால் அழிவர் மனிதர் --- (உ)

மலத்தினை முகர்ந்தால் பற்றுமே பெருநோய் உடலினை
உலர்ந்த கழிவும் உண்டாக்கும் அதுபோல் நோயினை
பலரது கழிவுகள் பலப்பல காரணியாம் நோய்க்கு
நலமுள உடலே இதுபோல் நாமென்ன சாலபிறவி --- (ங)

அறிவை வளர்க்க சென்றோம் பள்ளிக் கூடம்
அறியாத செய்தியை தந்தவர் ஆனார் குருவாய்
அறிந்துக் கொண்டதால் உயர்ந்தோம் சிறந்த மனதராய்
அறிவைப் பெருக்கியே மனிதம் மறந்தோம் வீழ்ந்திடுவோம் --- (ச)

வாகனம் நம்மை வளமாய் கொண்டுச் சேர்க்கும்
போகும் இடங்களை வேகமாய் சென்றே அடையும்
பாகன் ஒருவனும் வேண்டுமே சேவகம் செய்ய
வேகமும் அதிகங் கொண்டால் எமனும் தெரிவானே --- (ரு)
--- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (21-Apr-22, 9:19 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 58

மேலே