எழிலரசி

எழிலரசி

அன்பே
நைட்டெல்லாம் நோயாளிகளுக்காக உழைப்போர் எல்லாம் நைட்டிங்கேல் இல்லை நீ நைட்டி போட்டு நடந்தா நீதான் நைட்டிங்கேல்

உன் குரல் கேட்டதும் அந்த குயில் மரத்திலிருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டது இவ்வளவு நாள் தன் குரல்தான் உலகத்தில் சிறந்தது என்ற கர்வம் தகர்ந்ததால்


எல்லோருடைய தாத்தாக்களும் இறந்தபின்பு ஆகிறார்கள் காக்கா உன் தாத்தா மட்டும் ஆகிறார் குயில்
உங்க ஆயா இழந்தால் ஆகிறார்கள் மயில்

வயதானால் எல்லோரும் பாட்டி ஆகிறார்கள் நீ மட்டும் தானடி பியூட்டி ஆகிறாய்

நான் உன் உள்ளத்தை நேசிக்கிறேன் நீ என்னிடம் உள்ளதை நேசிக்கிறாய்

உன் பெயர் மது என்பதால் நான் மதுவிலக்குப் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை
நீ நீட்டு பொட்டு வைப்பதால் நான் நீட் எதிர்ப்பு போராட்டத்தில் கூட கலந்து கொள்ளவில்லை

உன் பெற்றோர்களுக்கு நிச்சயம் சர்க்கரை நோய் உலகத்திலேயே அதிகமாகத் தான் இருக்கும் ஏனென்றால் 50 கிலோ சர்க்கரையை பெற்றெடுத்து இருக்கிறார்கள் அல்லவா


அன்பே உன் அழகை தவிர இவ்வுலகில் எனக்கு வேறு எதுவும் இல்லை பெருசா
நீ உண்மை என்று சொன்னால் மகிழ்ச்சியில் முழக்கம் இடுவேன் முரசா
நீ இல்லை என்றால் என் வாழ்க்கை ஆகிவிடும் தரிசா
நீ இங்கிலாந்தில் பிறக்காது இந்தியாவில் பிறந்த தெரசா


அன்பே நீ நீதிபதியாக இருந்தால் நான் தூக்கு தண்டனையை ஏற்க தயார்
தூக்கு தண்டனை என்றால் என் இரு கரம் கொண்டு உன்னை தூக்கும் தண்டனை

எழுதியவர் : Kumar (23-Apr-22, 6:28 am)
சேர்த்தது : புதுவைக் குமார்
பார்வை : 62

மேலே