காதல் குளிர்ச்சி

காதல் குளிர்ச்சி
சக்கரவாசனின்


கலி விருத்தம்


புளிமா. கூவிளம். கூவிளம். தேமாங்காய்

எழுத்து. நட்பதும் இக்கணமே வந்திடுவீர்
அழுத்த இத்தளம் கால்தனை ஊன்றிடுபின்
பழுத்த நற்றமிழ் பாபுனைந் தேசுவைக்க
கெழுவுக் குத்தர மெல்லிசை யாக்குவாரே

கெழுவுக்கு. ===. நண்பர்களுக்கு



கலி விருத்தம்

கூவிளம். கூவிளம். கூவிளம். காய்

மெல்லினம் வல்லினம் தீஞ்சுவை செய்யுளுக்கு
சொல்லினுள் இவ்வினம் சொற்படி ஊர்வலமாம்
அள்ளிடத் தான்குறை யாப்பொரு ளீட்டுந்தண்
கள்குடி வண்ணவண் டாய்சுகிக் கவிதையே


நேரிசை வெண்பா

வெண்பா விலமைவது பெண்தாக்க மென்றாலும்
பண்பாடும் உச்சப் பறவையாய் -- பண்பாட்டில்
பண்ணமை துன்பங் கவிதையில் காணாதே
பண்ணும் அனலிலாத் தண்

நெருப்பனல் இல்லாது தண். =. குளிர்ச்சி


நேரிசை ஆரிரியப்பா

இலக்கணக் கவிதை இல்லா திருப்பினும்
இலட்சணம் மாறா பூக்களை பகிரும்
அக்கரை யிலமைப் பூங்கவிதை உலவும்
அப்பா மானச் சிறக்கும்
எழுத்தின் பாக்கள் என்றும் சிறக்குமே

எழுதியவர் : சக்கரைவாசன் (23-Apr-22, 9:40 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 43

மேலே