அழைக்காதீர்கள்
திருட்டு நாயே....
ஐயோ...நாய் நன்றியுள்ளதாச்சே....!
திருட்டு கழுதையே...
பாவம் நம் அழுக்கையெல்லாம்
பொறுமையாய் சுமக்கிறதே....!
திருட்டு மனிதா....
ஆம். சரியே....
மனிதனுக்குத்தான்
நன்றியும் இல்லை
பொறுமையும் இல்லை.
இனி யாரும்
திருட்டு நாயே...திருட்டு கழுதையே
என்று தவறியும்
அழைக்காதீர்கள்.