கவிதையின் கரு அவள்

நான் எழுதிய
கவிதை அனைத்திலும்
கவிதையின் கரு
அவள் மட்டும் தான்..!!

கவிதையின் கருவாக
இருந்து என்னை கவிதை
எழுத முனைப்பதும்
அவள் நினைவுகள் தான்..!!

அலைந்து திரியும்
விழிகளும் மௌனமொழி
என்னிடம் பேச
அழகாய் படைத்தானோ..!!

உலகெங்கும் சிந்தனையை
சிதற விட்டு நான்
எழுதும் கவிதை
முழு இடத்தைப் பிடிக்கிறது..!!

என் சிந்தனை குள்ளும்
சொந்தம் வைத்தவள் அவள்
சொக்கி கிடக்கிறேன்
சுமை தாங்கி போல்
சுமக்கிறாள் என்னையே..!!

எழுதியவர் : (24-Apr-22, 6:08 pm)
பார்வை : 78

மேலே