வழிகாட்டி

எண்ணத்தைச்
செயலாக்கும்
எண்ணம் வேண்டும் !

முயற்சியிலே நல்ல
திண்ணம் வேண்டும் !

பின்னரே
வெற்றிச் சின்னம்
ஒருவனை வேண்டும் !

ஆப்பிள் விழுவதை
நியூட்டன் மட்டுமா
பார்த்தார் !
இல்லைதானே !

ஆயிரம் பாரதிகள்
பிறந்திருக்கலாம்,
வீட்டுக்குக் கவி இசைத்து
யாருக்கென்ன லாபம்,
பற்றி எரியும்
நாட்டுக்கு எடுத்துரைத்து
மகாகவி ஆனது ஒருவர் தானே !

வாழ்வின் நெறி
காட்டிய புத்தர்
அஹிம்சை வழி
காட்டிய காந்தி !

அறமும், பொருளும்,
இன்பமும் யாதென
உலகறியச் செய்த
வள்ளுவர் !

அண்ணலும்
அண்ணாவும்
இன்று வரை
நிற்பது எதனால்?

பாதைக்கு
வெளிச்சம் போடும்
விளக்கு,
கூடவே கூட்டிச்
சென்றடையும்
இலக்கு !
இவைதான் பேசும்
ஒருவனின் சிறப்பு !

முயன்று பார்
வழிகள் திறக்கும் !
செய்து பார்
வெற்றிகள் பிறக்கும் !
வழி காட்டிப் பார்
பாரிலே உன் பேர் சிறக்கும் !

- நா முரளிதரன்

எழுதியவர் : நா முரளிதரன் (24-Apr-22, 9:57 pm)
சேர்த்தது : நா முரளிதரன்
Tanglish : valikaatti
பார்வை : 123

மேலே