மதிப்பெண் இயந்திரம்
✡️✡️✡️✡️✡️✡️✡️✡️✡️✡️✡️
*கவிதை*
படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்
✡️✡️✡️✡️✡️✡️✡️✡️✡️✡️✡️
என்னை
மதிப்பெண் எடுக்கும்
இயந்திரமாகவே உருவாக்கிவிட்டு...
பிறகு
என்னிடம்
ஏன் அம்மா
அன்பு பாசத்தை எதிர்பார்க்கின்றீர்கள்?
♦♦♦♦♦♦♦♦♦♦♦
என் தாய்
எப்போதும்
என்னிடம்
ஒரு ஆசிரியராகவே
நடந்துகொள்வார்.....
என் தந்தை
எப்போதும்
என்னிடம்
ஒரு காவலராகவே
நடந்து கொள்வார்....
அப்படி இருக்க
நான் மட்டும் அவர்களிடம்
ஒரு மகனாக
நடந்து கொள்ள
வேண்டும் என்று
எதிர்பார்கின்றார்களே?
♦♦♦♦♦♦♦♦♦♦♦
மதிப்பெண்கள் மட்டுமே
ஒரு மாணவனின்
தரத்தை
தீர்மானிக்கிறது என்று
இந்த சமூகம்
நம்பும் வரை
மாணவர்களின் தரம்
என்றுமே
உயரப் போவதில்லை.....
♦♦♦♦♦♦♦♦♦♦♦
வளர்கின்ற காலத்தில்
பணத்தைப் பற்றி மட்டும்
சொல்லாமல்
பாசத்தை பற்றி
சொல்லியும்.....
மதிப்பெண்களை பற்றி மட்டும்
சொல்லாமல் மனிதர்களைப்
மதிக்கும்
நல்லெண்ணங்கள் பற்றி
சொல்லியும்....
ஆடம்பரத்தை பற்றி மட்டும்
சொல்லாமல்
அன்பைப் பற்றியும்
சொல்லி வளர்த்திருந்தால்
நான் ஏன்
பெற்றோர்களை
முதியோர் இல்லத்தில்
சேர்க்கப் போகிறேன்......?
*கவிதை ரசிகன்*
✡️✡️✡️✡️✡️✡️✡️✡️✡️✡️✡️