காதலனும் காதலியும் குறுந்தொகை

செவிலித்தாய் மகள் நடத்தும்
சமையலை நேரில் பார்த்து திரும்பி த்
தாயின்கண் கூறுவதாக


முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்
கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇக்
குவளை யுண்கண் குய்ப்புகை கமழத்
தான்துழந்து அட்ட தீம்புளிப்
பாகர் இனிதெனக் கணவ னுண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதல்
முகனே.


தயிர் கட்டியாக இருந்ததால், தலைவி மோர்க்குழம்பு செய்யும் பொருட்டுத்
தன் மெல்லிய விரல்களால் துழாவித் தாளிதம் செய்தாள். விரைவில்
சமைக்க வேண்டுமென்று விரும்பியதால் தயிர் பிசைந்த கையைத்
துடைத்த ஆடையைத் துவைப்பதற்குத் தலைவி மறந்தாள்

.அவள் சமைத்த உணவைத் தன் கணவன் “இனிது” என்று
விரும்பி உண்டதால் தலைவியின் அகமகிழ்ச்சியை முகம்
காட்டியது. இயல்பாகவே அழகாக இருந்த நெற்றி, மகிழ்ச்சியால்
மேலும் அழகாகத் தோன்றியது.

இதுதான் முன்காலத் தமிழ் கலாச்சாரக் காதல் பாட்டு


இதை ஏற்கனவே டாக்டர் கன்னியப்பன் தளத்தில் எழுதியுள்ளார்

எழுதியவர் : பழனி ராஜன் (24-Apr-22, 9:25 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 503

சிறந்த கவிதைகள்

மேலே