சுமந்த சோகம் வடிந்து, சுவைத்தது ஆசைகளைத் தான்

தோகை மயிலே, தோகை மயிலே;
உன் தேகத்தை தான் பார்த்தாயா;
தூவும் மழையில், தூவும் மழையில்; ‘தாவும் மேகத்தை
தோகை விரித்து துணை சேர ,நாழிகை குறித்தாயோ.
அற்றை திங்கள் இரவின் மடியினிலே;
ஒற்றை நிலவு வடிக்கையிலே;
முழிக்கும் இன்பப் பொழுதினிலே;
செங்கனி ஊறிய வாய் திறந்து,
அகவியே துணையை அழைத்தாயோ.
முகை நகையே முகை நகையே
முல்லை முழித்து சிரிக்கத் துடிப்பதை பார்த்தாயா;
முழுநிலவும் முழுநிலவும் காய்ந்து கிடப்பதைப்பார்த்தாயா;
தேடும் உன் இரு விழிகள் தான்,
ஓடும் மேகத்தை துணை நாடியதோ;
மலர் விழியே மலர் விழியே
மரல் (கொழிநீர்-குழம்பிய) விழி ஆனாயோ;
முரல்கள் பாசையைக் கேட்டு முழுதாய் சோகம் வடித்தாயோ;
ஊரல்கள் தேடும் சுகத்திற்கு விருந்து தான் படைக்கத் தவித்தாயோ;
பஞ்சவர்ணங்களை பூசி பசி தீர்க்க வந்தாயோ;
அழகு முகிலே; அழகு முகிலே; அலையும் மழை முகிலே;
உலர்ந்த நீயும், பு((ண)லர்ந்த பொழுதில்;
அலர்ந்த மயிலின் விழியின் ஏக்கத்தைக் கேட்பாயோ;
வாடும் விழிகளை வதங்கத் தான் வைப்பாயோ
அட அழகு மயிலே, அழகு மயிலே;
சுற்றித்தான் வந்தாயோ;
இற்றைத் திங்கள் நிலவினிலே
சுற்றித்திரிந்து ஆடுகின்றாய்;
சூழ்கொண்ட மேனகமாய்,
மோகம் கொள்கின்றாய்;
அட, தேகக் காதல் தான் தோற்றதுவோ;
தேக்கிக் கிடந்த ஆசைதான் வடி(ந்)த்ததுவோ;
தோகை விரித்து ஆடியும்,
தேடும் காதல் தான் வாடியதோ;
தேங்கிக்கிடந்த நினைவுகள் தான் ,
தேகத்தை தீண்டியதுவோ;
உன், சாகா உன் காதல் தான்
சந்தம் பாடியதோ;
சுல சல ஓடையில்
கல கலவென்று விளையாடிய காலம் நினைவை அரித்ததுவோ;
அகவும் அழகு மயிலே, அழகு மயிலே;
ஆடித்திரிவதேனோ
ஓடித்திரியும் விழிகள் இரண்டும்;
கூடிப் பழக உனது ஜோடி வராது
தவித்ததோ;
சொந்தத்தை தேடி தவித் தாயோ;
சொர்க்கத்தைத் தேடி துடித்தாயோ;
அற்றைத் திங்கள் விண்ணிலே;
ஆள்ளித்தெளித்த நட்சத்திரங்கள்
சுற்றும் தென்றல் தவிக்கையிலே
சுழலும் புவியில்
சொந்தம் தேடி தவித்துவிட்டாய்,
சொக்கும் ராகம் கேட்ட உடன்
சொந்ந்தம் தேடி வந்த பெண்மயிலே;
ஓற்றைப்பார்வையில் உயிரை வதைத்துவிட்டாய்;
கொட்டி ஓய்ந்து ஒட்டிப்புறண்டு ஓடிய செம்புலப்பெயலாய்,
ஒட்டியே இணைந்துவிட்டாய்;
திருட்டுப் பார்வையிலே,
இருட்டைத் துடைத்துவிட்டாய்;
இரவுககு இரவல் ஆனாய்;
உறவுக்கு உயிர்கொடுத்தாய்;
மௌனத்திற்கு மொழிகொடுத்தாய்
மன்மதனை துணைக்கு அழைத்தாய்;
செஞ்கனியாய் சிவந்திடவே, சேல் விழி சேவல் மயிலுடன், சேர்ந்தே செல்ல நடை பழகிவிட்டாய்;
அடர் இருட்டினிலே, ஜோடியுடன்,
அடைந்திட இடம் தேடிவிட்டாய்;
சுகம் சுகம் தான்
சுமந்த சோகம் வடிந்து,
சுவைத்தது ஆசைகளைத் தான்;
அ. முத்துவேழப்பன்