அவளின் வருகை
வாழ்வின் அர்த்தத்தை அறிவித்துச்
சென்றது அவளின் வருகை,
அவளின் குறும்புகளில்
வேலைகளை மறந்தேன்
அன்பினில்
என்னையே மறந்தேன்.,
வேலைக்கு செல்லும் நேரம் தவிர
அவளோடு இருப்பதையே
வேலையாக்கிக் கொண்டேன்.,
எனக்குள் தாய்மையை
விதைத்தவள்
எனை அன்பினில்
நனைத்தவன்
என் கனவுகளுக்கு
வண்ணம் கொடுத்தவள்
என்னவள்,
என்னை எனக்கே
மீண்டும் அறிமுகம் செய்தவள்
என் உயிரின்
பெண் வடிவம் அவள்...
அவள் -என் மகள்
அன்புடன் ஆர்கே ..