அதைத்தருக அரசே

பத்தாயிரம் பதவிக்கு விண்ணப்பித் திருப்போர்கள்
பதினேழு இலட்சத்திலும் கூடுதலாம் அரசறிவிப்பு
பெருமையென நினைக்கிறது அரசாங்கமும் ஆளுவோரும்
தன்னிலைக்கே ஈட்டமுடியா நிலையிலேயே மக்களுமே

வெட்கமுமே கூச்சமுமே இல்லாமலே கூறுகிறார்
பணியாளர் தேர்வாணைய உயரதிகாரி எதிர்பார்ப்பை
இருபத்து ஐந்துலட்சம் விண்ணப்பமும் வருமென்று
உரியகல்வியை பெற்றவர்கள் தகுதியான பணியின்றி

கொலைகொள்ளை செய்வதினை ஊக்கமாக்கும் செய்கையாக
அரசுதரும் அறிவிப்பும் அதுசார்ந்த செய்திகளுமே
ஒருபதவியில் வெற்றிபெற முன்னுறுபேர் போட்டியிட்டால்
என்னவாகும் தேர்தல்களம் என்பதையும் எண்ணுவாரோ

ஐந்தாண்டு பதவிக்கே அல்லல்படும் நிலையினிலே
அறுபதுவரை பணிபுரிய தேர்வினையும் எதிர்கொள்ள
இறுதிகல்வி பயின்றவர் தொடங்கியும் முனைவர்வரை
இளநிலை உதவியாளர் பதவிக்கே எழுதுவதோ

என்னகொள்கை என்னதிட்டம் வகுத்தபடி உள்ளதரசு
பயின்றோரால் பலவகையில் துர்செயல்கள் நடக்குதுலகில்
களைவதும் நீக்குவதும் போக்குவதும் அரசின்கடன்
அதற்கானது அறங்காக்கும் ஒருவேலையே அதைதாஅரசே.
--- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (29-Apr-22, 9:02 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 18

மேலே