உலக அமைதி என்னும் வார்த்தை ஜாலம்

உலக நாடுகளை ஏமாற்றி அழிக்கும் நாடுகளின் கையில் அதிகாரம் வீட்டோ வடிவில்.
உலக நாடுகளை ஏமாற்றி ஆக்கிரமிக்கும் ஐக்கிய அமெரிக்க, ஐக்கிய இராச்சியத்தின் அதிகாரி நேட்டோ வடிவில்.
உருப்படுமா உலகம்? சரிப்படுமா இந்த கலகம்?

மக்களின் மீது அக்கறை இருப்பதாக தெரியவில்லை.
தனிப்பட்ட இருவரின் சண்டை, உடையுது பாரு மக்களோட மண்டை.
அகிம்சை என்பார், ஆயுதம் கோடி தயாரித்துக் குவிப்பார்.
எதற்காக? அமைதிக்காகவா? அமைதியை அழிக்கவா?

ஐக்கிய அமெரிக்கா செய்தால் தீவிரவாத ஒழிப்பு.
அதையே ரஷ்யா செய்தால் தீவிரவாத ஆக்கிரமிப்பு.
போதுமடா சாமி உங்கள் கொக்கரிப்பு.
இனியாவது தொடங்கட்டும் உக்ரைன், ரஷ்ய அமைதி ஒத்துழைப்பு.

மீண்டும் மீண்டும் அறைந்து உறைக்கிறேன், " யுத்தங்கள் உருவாவதில்லை. அவை திட்டமிட்டு உருவாக்கப்பசுகின்றன".
உக்ரைன், ரஷ்யாவிற்கும் ஒரு பொருந்தும்.
அமெரிக்கா, சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தானுக்கும் பொருந்தும்.
இஸ்ரேல், பாலஸ்தீனத்திற்கும் பொருந்தும்.

நேருக்குநேர் மோதும் ரஷ்யாவை நம்பலாம்.
ஆனால், முதுகில் குத்தும் ஐக்கிய அமெரிக்கா, தனக்கு தேவையானவற்றை பொருளாதாரத் தடைகள் என்னும் போலி சட்டங்களால், நம்பக்கூடாது. நம்பவே கூடாது. நம்பினால் நரகமே!

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (30-Apr-22, 1:53 am)
பார்வை : 1064

மேலே